நக்ஸல்?-சந்தேகத்தின்பேரில் 20 பேர் கைது!

Subscribe to Oneindia Tamil

தேனி: கொடைக்கானல் அருகில் நக்ஸலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் புதிய புதிய நபர்கள் பலர் நடமாடுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மாவோயிஸ்டுகள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேர், கொடைக்கானல் அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், விசாரணையின் போது அவர்களுள் சிலர் வழிபாட்டிற்காக வந்ததாகக் கூறினார்கள். வேறு சிலரோ மாறுபட்ட காரணங்களைக் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+