தேனி தேமுதிக வேட்பாளராக மா விவசாயி சந்தனம்

Subscribe to Oneindia Tamil

Santhanam
தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஜி.சந்தனம், ஒரு விவசாயி ஆவார்.

சந்தனம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர். பெரியகுளம் ஒன்றிய தேமுதிக செயலாளராக இருக்கிறார். 52 வயதாகும் இவர் ஒரு மா விவசாயி ஆவார்.

அனுசுயா தேவி என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தந்தை கோவிந்த தொண்டைமான், தாய் மயில்தாயம்மாள்.

திமுகவிலிருந்து தேமுதிகவுக்கு வந்தவர் சந்தனம். திமுகவில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் தொண்டரணி அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

1986-ம் ஆண்டு பெரியகுளம் நகரசபை தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தேனி தொகுதியில் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சந்தனம் பதிலளிக்கையில், தலைவர் விஜயாகாந்த் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை மக்கள் வெற்றி பெற செய்தால் திண்டுக்கல்-குமுளி அகல ரெயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வலியுறுத்துவேன். பெரியகுளம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ தொழிற்சாலை தொடங்கவும், மாங்காய் விற்பனை மையம் தொடங்கவும் பாடுபடுவேன்.

பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் மலைச்சாலை திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துவேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கட்சி தலைவர் விஜயகாந்த் வழியில் நிற்பேன். தேனி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன் என்கிறார் சந்தனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+