ஜெ-ராமதாஸ் சந்திப்பு: பாமகவுக்கு 7 லோக்சபா, 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் இன்று முறைப்படி இணைந்தது பாமக. இன்று காலை பத்தரை மணியளவில் போயஸ் தோட்டம் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஜெயலலிதாவை சந்தித்தார்.
அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் சென்றனர். அவர்களை ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
வீட்டு வாசலில் நின்று ராமதாஸை வரவேற்று அழைத்துச் சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்தார் ராமதாஸ். அதிமுக கூட்டணிக்கு வர பாமக முடிவெடுத்ததற்கு ராமதாஸுக்கு நன்றி கூறிக் கொண்டார் ஜெயலலிதா.
பின்னர் இரு தலைவர்களும் உள்ளே சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஜெயலலிதாவும், ராமதாஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் என கூட்டாக இருவரும் அறிவித்தனர். இவை தவிர, 1 மாநிலங்களைத் தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒரு உடன்பாட்டிலும் இருவரும் கையெழுத்திட்டு அதையும் இருவரும் வெளியிட்டனர். இதையடுத்து ராமதாஸை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
தொகுதிகளை அதிமுக தான் அறிவிக்கும்:
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாமக தலைவர் மணி, எங்கள் பொதுக் குழுவில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவான உடனேயே அதிமுக தலைமைக் கழகத்தி்ல் எங்களுக்கான 7 தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொகுதிகள் சுமூகமாக அடையாளம் காணப்பட்டதையடுத்து இன்று உடன்பாடு எட்டப்பட்டது.
எங்களுக்கான தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அதிமுக தலைமை அறிவிக்கும் என்றார். இதையடுத்து சிறிது நேரத்தில் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார்.
அங்கே ராஜினாமா.. இங்கே உடன்பாடு:
நேற்று முன்தினமே ஜெயலலிதாவை டாக்டர் ராமதாஸ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அன்புமணி மற்றும் வேலு ஆகியோர் பதவி விலகிய பின்னர் வந்து சந்திக்கவும் என ஜெயலலிதா தரப்பிலிருந்து கூறப்பட்டதால், ராமதாஸ் உடனடியாக ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.
ஜெயலலிதாவின் நிபந்தனையையடுத்து பிரதமரை சந்திக்க அன்புமணியும், வேலுவும் அப்பாயிண்ட்மெண்ட் கோரினர். அவர்களுக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் நேற்றே டெல்லி விரைந்தர். இதையடுத்தே ராமதாசுக்கு இன்று ஜெயலலிதாவை சந்திக்க அதிமுக தரப்பு நேரம் ஒதுக்கியது.
அன்புமணியும் வேலுவும் இன்று பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை தருகின்றனர்.
வேலு நேற்றே ரயில் அதிகாரிகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications