வருண் காந்தி மீது மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு

வருண் காந்தி கோர்ட்டுக்கு வந்து ஆஜராகும் நாடகம் நேற்று அரங்கேற்றப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பாஜகவினர் திரண்டு வந்தனர்.
கோர்ட்டுக்கு வெளியே அவர்கள் பெரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதேபோல, வருண் காந்தியை சிறைக்குக் கொண்டு சென்றபோதும் அவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
சிறைக்கு வெளியே அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கும்பலைக் கலைத்தனர்.
இந்த வன்முறையில் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், வருண் காந்தி மீது, கலவரத்தைத் தூண்டியதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
மேனகா புகாருக்கு மறுப்பு ..
இதற்கிடையே, முஸ்லீம் காவல்துறை அதிகாரி ஒருவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதை பிலிபித் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
மேனகா காந்தி குற்றம் காட்டும் காவல்துறை அதிகாரியான பர்வேஸ் மியான், நேற்று பணியிலேயே இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
தற்போது பிலிபித்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications