கட்சி முடிவுக்கு கட்டுப்படுங்கள்- போராட்டம் கூடாது: தங்கபாலு எச்சரிக்கை
சென்னை: காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல், குறிப்பிட்ட தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தொண்டர்களை கட்சித் தலைவர் தங்கபாலு எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் நேற்று சத்தியமூர்த்தி பவன் வாசலில் போராட்டம் நடத்தினர்.
திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் ஆக்மிரப்பு வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு வீராபுரத்தில் 1 சென்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலருக்கு இன்னும் வீட்டு மனை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கறும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு அளித்த பேட்டியில்,
திமுகவும், காங்கிரஸ் கூட்டணி பலமிக்க கூட்டணி. எங்களுடன் இல்லாதவர்கள் தோல்வி காண்பது உறுதி. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும், திமுகவுக்கு 30 சதவீதமும் ஓட்டு வங்கி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
கடந்த காலங்களில் திமுகவும், காங்கிரஸ் இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.
இலங்கை பிரச்சினையில் திருப்தி...
இலங்கை தமிழர்கள் பிரச்சினையிலும் நாங்கள் திருப்தியாகவே செயல்பட்டிருக்கிறோம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று ராஜபக்சே அறிவித்திருப்பதற்கும் நாங்கள் எடுத்த முயற்சிகள் தான் காரணம்.
தமிழ்நாட்டுக்கு மிகச் சிறந்த திட்டங்களை கொடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாமக வருத்தப்படும்...
காங்கிரசுக்கு எதிராக முடிவெடுக்கும் முன்னரே பாமகவினர் அவர்களாகவே அரசியல் பண்பாடு காரணமாக பதவி விலகியிருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் இருந்தவரை நல்ல மந்திரிகளாக செயல்பட்டனர். மே 16ம் தேதிக்கு பின்னர் அவர்கள் விலகியதற்காக வருத்தப்படுவார்கள்.
உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது...
இந்த கூட்டணியில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை முடிவு செய்யும். அதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பார்கள். சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.
எந்த தொகுதிகளை பெற வேண்டும் என்பதை கட்சி தலைமையகம் முடிவு செய்யும். குறிப்பிட்ட தொகுதி தான் வேண்டும் என்பது போன்ற கட்சிக்குள் பேச வேண்டிய உள்விவகாரங்களை கட்சிக்கு வெளியில் பேசுவதோ, போராட்டம் நடத்துவதோ மேலிட முடிவை மீறுவதாகும். இனியும் இந்த மாதிரி போராட்டங்கள் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தங்கபாலு.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications