விலகிச் சென்றவர்கள் தேர்தலுக்குப் பின் வருவார்கள் - ஆசாத்
சென்னை: தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தங்களது முடிவுக்காக வருந்துவார்கள், மீண்டும் காங்கிரஸை நாடி வருவார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வந்திருந்த குலாம் நபி ஆசாத் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இப்போது பா.ம.க. இல்லை என்றாலும் மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமையும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த கூட்டணி மத்தியில் எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
இது பாராளுமன்ற தேர்தல், எனவே அவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேர்தல் முடிவுக்கு பின்னர் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்.
விஜயகாந்தைப் பற்றி எனக்கு தெரியாது. இப்போது இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு சிறப்பாக முடிந்துள்ளது.
தொகுதி உடன்பாடு எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது. இருதரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த 5 வருட காலமாக நாங்கள் இருதரப்பினரும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி மிகவும் சிறப்பாக உள்ளது.
சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் தலைமையில் நாட்டில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
எனவே இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் பெறும். 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். கடந்த காலத்தில் மக்களுக்கு செய்ததைவிட மேலும் அதிகமாக செய்வோம் என்றார் ஆசாத்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications