லாகூர் தாக்குதல்-22 பேர் பலி, தீவிரவாதிகள் கைது
லாகூர்: லாகூர் போலீஸ் அகாடமி கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பல போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அரசு, பாகிஸ்தானில் வட மேற்கு எல்லை பகுதியில் இருக்கும் தாலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்களை முற்றிலுமாக ஒழிக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
இதற்கு ஓரளவு தலையசைக்கும் பாகிஸ்தான் அரசு மீது இந்த தீவிரவாத கும்பல் கடும் கோபத்தில் இருப்பதால் தொடர்ந்து பாகிஸ்தானில் வெறியாட்டம் நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் உள்ள மனவன் போலீஸ் அகாடமியில் இன்று காலை 7.30 மணிக்கு தீவிரவாதிகள் படுபயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல போலீசார்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்து சென்றன.
பலர் அந்த இடத்தில் பிணமாக செத்து விழுந்தனர். கால்களில் அடிபட்ட சில போலீசார் கைகளை தரையில் இழுத்து கொண்டு தவழ்ந்து சென்றனர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாக தெரிகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க போலீசார், துணை ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து லாகூர் போலீஸ் அதிகாரி சையத் அகமது மொபின் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில்,
இங்கு பெரும் பீதி நிலவுகிறது. உள்ளே எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. அவர்களில் எத்தனை கெல்லப்பட்டனர். எத்தனை பேர் பக்கத்தில் உள்ள கட்டிடங்களில் மறைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. இதில் 8 போலீசார் வரை பலியாகி இருப்பார்கள் என்றார்.
லாகூர் தலைமை போலீஸ் அதிகாரி ஹபிபூர் ரஹ்மான் கூறுகையில், 6 அல்லது 7 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேப்படுகிறோம். துணை ராணுவத்தின் உதவியை கேட்டுள்ளோம் என்றார்.
மேலும் 15 முதல் 20 தீவிரவாதிகள் உள்ளே பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. போலீஸ் அகாடமிக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்ற கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
தீவிரவாதிகள் கைது...
இந்த பயங்கர தாக்குதலில் 22 பேர் பலியானார்கள் என்றும், சுமார் 800 பேர் வரை பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படடது. இந்நிலையில் போலீசார் வெற்றிகரமாக தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளனர். சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி ஒருவன் போலீஸ் வாகனம் ஒன்றில் ஏறிக்கொண்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினர் அவனை கைது செய்தனர்.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், அவனிடம் சில வெடிகுண்டுகளும், துப்பாக்கி இருந்தது. தாடி வைத்திருந்த அவன் கிழக்கு ஈரானில் பேசப்படும் பாஸ்டோ மொழியில் பேசினான் என்றார் அவர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications