கு.ப.கிருஷ்ணன்: தேமுதிக to மீண்டும் அதிமுக

ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் ஜெயலலிதாவைப் போலவே இவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கினார்.
வருமானத்தை மீறி ரூ. 3.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந் நிலையில் அதிமுகவிலும் ஒதுக்கப்படவே அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்தார். வெறும் லெட்டர் பேட் கட்சியாகவே இருந்த தமிழர் பூமியை கலைத்துவிட்டு கடந்த 2006ம் ஆண்டில் தேமுதிகவில் இணைந்தார்.
அவருக்கு மாநில துணைப் பொது செயலாளர் பொறுப்பு வழங்கிய விஜய்காந்த் அத்தோடு அவரை மறந்தும் போனார். இப்போது திருச்சி அல்லது கரூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார் கு.ப.
ஆனால், சீட் எல்லாம் கிடையாது என்று கூறிவிட்டார் விஜய்காந்த். இதையடுத்து தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளார் கு.ப.கிருஷ்ணன்.
இதற்காக இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கிறார்.
அவரை அதிமுக தலைமையே மீண்டும் கட்சிக்குள் இழுத்ததாகவும் பேசப்படுகிறது. தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் கு.ப. ஆதரவாளர்கள்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications