டெல்லியில் இருந்து நியூயார்க்கிற்கு தினசரி விமானம்- ஏர் இந்தியா
பிராங்க்பர்ட்: டெல்லி மற்றும் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக முறையே நியூயார்க் மற்றும் சிகாகோவுக்கு தினசரி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்கு பிராங்க்பர்ட் நகரம் வழியாக ஏர் இந்திய நிறுவனம் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இயக்கி வந்தது.
தற்போது அதை தினசரி விமானமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பிராங்க்பர்ட்டில் ஒரு வாரத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் இந்நிறுவனம் அகமதாபாத்தில் இருந்து பிராங்கபர்ட்டுக்கு தினசரி விமானம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் முதல் கோடைக்கால விமான சேவை மும்பை, டெல்லியிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்டு நேற்று முன்தினம் பிராங்க்பர்ட் விமான நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்குச் சென்றது.
இது குறித்து மத்திய ஐரோப்பாவுக்கான ஏர் இந்தியா மேலாளர் ரத்தன் பாலி கூறுகையில்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே வாரத்துக்கு 69 விமான சேவைகளை இயக்குவது லாபகரமாக இருக்கும் என நாங்கள் எடுத்த ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. இதையடுத்து இம்முடிவுக்கு வந்தோம்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே விமானங்களை இணைப்பதற்கேற்ப விமானங்களை ஏர் இந்தியாவும், லுப்தான்சாவும் திறம்பட இயக்கி வருகின்றன. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த விமான நிறுவனமாக ஏர் இந்தியா விளங்க வழியேற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவில் இருந்து நிறுவனத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் கொச்சி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிய விமான சேவையை துவக்கவுள்ளோம். இது உள்ளூர் பயணிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார் ரத்தன் பாலி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications