சேது பந்த்: கருணாநிதி மீது ஜெ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடக் கோரி திமுக சார்பில் 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் பந்த் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதிமுக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அதை உண்ணாவிரதப் போராட்டமாக திமுக அறிவித்தது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். சிறிது நேரத்தில் கருணாநிதி அங்கிருந்து சென்று விட்டார். இருப்பினும் மாநிலம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டம் என அழைக்கப்பட்டாலும் கூட தமிழகம் முழுவதும் அன்று பிற்பகல் வரை பஸ்கள் ஓடவில்லை. மாலை வரை கடைகளும் திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட பந்த் போலவே காணப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது அதிமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததது.
இந்த வழக்கு நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், தனது குற்றச்சாட்டை அதிமுக நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அதே போல சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சித்துப் பேசியதாக மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மீதும் ஜெயலலிதா அவமதி்ப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications