ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என மத்திய உள்துறைக்கு இன்டெலிஜென்ஸ் பீரோ எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு குறித்து உள்துற அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார். நேற்று பாஜக தலைவர் அத்வானியை சந்தித்து அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தலைவர்களுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வருகிறார். மொத்தம் 40 அரசியல் தலைவர்களுக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு...
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.பி. கூறியுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கும் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். பொது இடங்களில் செய்யக் கூடாதது, தவிர்க்க வேண்டியது என்ற ஒரு பட்டியலை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலைக்காரர்கள் முன் கவனம்...
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். உங்களுடைய தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை அவர்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளுங்கள்.
வீட்டில் வேலைக்காரர்கள் முன்னிலையில் பயணத் திட்டம் பற்றி ஆலோசனை செய்ய வேண்டாம்.
உணவில் கவனம்..
தங்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிரச்சார ஊர்வலம், பேரணியின் போது அருகில் வரும் நபர்களை உன்னிப்பாக கவனியுங்கள்.
பயணத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவ்வப்போது தெரிவியுங்கள்.
பாதுகாப்பு விதிமுறைகளை பிசகாமல் கடைபிடியுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பூங்கொத்துகளை வாங்குவது, மாலைகள், பொன்னாடைகளை பெறுவதைத் தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications