திருச்சி பள்ளி கொடி கம்பத்தில் கள் கலயம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளி கொடிக் கம்பத்தில் கள் கலயம் கட்டிய கயவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது மலையபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிக் கொடி கம்பத்தில் திடீரென கள் கலயம் கட்டப்பட்டிருந்தது.

இதனைக் கண்ட மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளிக் கொடி கம்பத்தில் கள் கலயத்தை கட்டிய கயவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+