பிரியங்கா காந்தியின் மாமனார் தூக்குப் போட்டுத் தற்கொலை
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜீந்தர் வதேரா டெல்லியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜீந்தர் வதேரா தெற்கு டெல்லியில் ஹாஸ்காஸ் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் இல்லத்தில் சில மாதங்களாக தங்கியிருந்தார். சூப்பர் ஸ்பொஷிலிட்டி மாக்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது அறையில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அறை வேலையாள் உடனடியாக மற்றவர்களை அழைத்தார்.
கழுத்தில் துணிக் கயிற்றை சுற்றி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராஜீந்தர் வதேரா.
சாகேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஏற்கனவே வதேரா இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருடைய உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது மகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக லோதி சாலை சுடுகாட்டில் உடல் தகனமும் நடைபெற்றது.
உ.பி. மாநிலம் மொராபாதாத்தில் வசித்து வந்தார் வதேரா. கைவினைப் பொருள் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தைக்கும், அண்ணன் ரிச்சர்ட் வதேராவுக்கும், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ராபர்ட் வதேரா. அதில், தனது பெயரையும், பிரியங்காவின் பெயரையும் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களை உ.பி. மாநில காங்கிரஸிலும், மொராதாபாத் மாவட்ட காங்கிரஸிலும் பதவிகளைப் பெற முயற்சிப்பதாகவும், இதை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார் ராபர்ட்.
அப்போது முதலே ராபர்ட்டுக்கும், அவரது தந்தைக்கும் இடையே பிணக்கு இருந்து வந்தது. மேலும் தனது குடும்பத்தை விட்டும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ராஜீந்தர் வதேரா.
மேலும், தனது மகன் பிரியங்கா காந்தியை திருமணம் செய்தது தாங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை என்றும் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார் ராஜீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் ராஜீந்தரின் மகள் மிஷல் கார் விபத்தில் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications