பாஜக கூட்டணியில் கிருஷ்ணசாமி-தென்காசியில் போட்டி!
சென்னை: தென்காசி (தனி) தொகுதியில் பாஜக ஆதரவுடன் போட்டியிட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார்.
தனக்கென நிலையான திட்டம் இல்லாதவர் கிருஷ்ணசாமி. ரஜினி உண்ணாவிரதம் இருந்தாலும் அழைக்காமலேயே வந்து மேடையில் அமர்ந்துவிடுவார், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தாலும் வந்து வாழ்த்துவார்.
அப்போதைக்கு ஏதாவது செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அளவிலேயே அவரது அரசியல் நடவடிக்கைகள் சுருங்கிப் போயுள்ளன. இந் நிலையி்ல் வரும் தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட முயற்சித்தார். ஆனால், அந்தத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்கிவிட்டார்.
இதையடுத்து பாஜகவுடன் பேச ஆரம்பித்துள்ளார்.
திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பெறாத பாஜக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது.
இவர்களோடு புதிய தமிழகமும் பாஜக கூட்டணியில் இணையவுள்ளது. தென்காசியில் பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளதால் அவர்களுடன் கைகோர்க்க கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications