வருண் மீது குண்டாஸ் பாய்ந்தது துரதிருஷ்டமானது-அர்ஜூன் சிங்
டெல்லி: வருண் காந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது என மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அர்ஜூன் சிங். தற்போது மத்திய மனிதவள துறை அமைச்சராக இருந்துவருகிறார்.
சமீபத்தில் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் மற்றும் மகளுக்கு சீட் தரும்படி காங்கிரஸ் மேலிடத்தை கேட்டு கொண்டார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து விட்டது.
இதையடுத்து அவரது மகள் வீனா சிங், மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் சிங் கூறுகையில்,
வருண் காந்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது மிகவும் துரதிருஷ்டமானது. எனது மகள் சித்தி தொகுதியில் போட்டியிடுவது அவரது சொந்த விருப்பம். இது குடும்ப விஷயம்.
ஆனால், இத்தொகுதியில் நான் எனது மகளுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன். காங்கிரசுக்கு தான் பிரச்சாரம் செய்வேன். நான் எப்போதும் கட்சிக்கு உண்மையானவனாக இருப்பேன் என்றார்.
அவரது சொந்த கருத்து-காங்கிரஸ்...
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான கபில் சிபல் கூறுகையில்,
வருண் பற்றி கூறுவது அவரது சொந்த கருத்து. அதை என்னால் விமர்சிக்க முடியாது. மேலும், வருண் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மாநில அரசின் வேலை என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications