சென்னையில் 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேர் கைது
சென்னை: தகவல் தொடர்பு சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், இலங்கையைச் சேர்ந்த, அந்தோணி செபாஸ்டியன், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மகேந்திரன் ஜெகநாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த குகன், கடலூரைச் சேர்ந்த ஜெயமோகன் ஆகியோரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், சாட்டிலைட் போன் உள்ளிட்ட சில பொருட்கள் சிக்கின.
விசாரணையில் ஜெகநாதனும், செபாஸ்டியனும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், புலிகள் இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களை வாங்க அவர்கள் சென்னையில் கூடியதும் தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தார் ஜெகநாதன். இவர்கள் இருவருக்கும் ஜெயமோகன் மற்றும் குகன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
குகனை ராமநாதபுரத்திலும், ஜெயமோகனை கடலூரிலும் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஜெயமோகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
மேலும் ஒரு இலங்கைத் தமிழர் கைது
இதேபோல சென்னையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, ஜெயந்தன் என்ற இலங்கைத் தமிழர் சிக்கினார்.
அவரிடமிருந்து 25 சாட்டிலைட் போன்கள், ஒரு ஜிபிஎஸ் கருகவரி, ஒரு இரவில் பார்க்கக் கூடிய கருவி, ஒரு வாக்கி டாக்கி ஆகியவை சிக்கின.
இவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாமோ என முதலில் போலீஸார் சந்தேகப்பட்டனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று பின்னர் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் இவற்றை சட்டவிரோதமாக இவர் கொண்டு வந்ததால், எதற்காக கொண்டு சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications