காங்கிரசுக்கு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் நிபந்தனை!
புதுச்சேரி: புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேல்சபை உறுப்பினர் பதவி வழங்கினால் மக்களவை தேர்தலில் காங்கிரசை ஆதரிக்க நாங்கள் தயார் என அக்கட்சி தலைவர் கண்ணன் நிபந்தனை விதித்துள்ளார்.
திமுக கூட்டணியி்ல் புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணனை அவரது கட்சி அலுவலகத்துக்கு சென்று நாராயணசாமி, முதல்வர் வைத்தியலிங்கம், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டனர்.
அப்போது கண்ணன் தங்களுக்கு மேல்சபை உறுப்பினர் பதவி தந்தால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக நிபந்தனை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications