தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை சித்ரவதை
ராமேஸ்வரம்: கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கப்பற்படையினர் 8 படகுகளில் வந்துள்ளனர். தமிழக மீனவர்களை கண்டதும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை நகரகூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
பின்னர் மீனவர்களின் படகுகளில் இறங்கிய கடற்படையினர் அவர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர். அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, நிர்வாணமாக்கியுள்ளனர்.
பின்னர் கச்சத்தீவு மணலில் வெயிலில் நிர்வாணமாக கிடக்க செய்துள்ளனர். அவர்களது மீன்பிடி சாதனங்களை உடைத்து, சேதப்படுத்தினர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளி சென்றுள்ளனர்.
மேலும் நடந்த சம்பவம் குறித்து டிவி, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தால் அதை நாங்கள் பதிவு செய்வோம். மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரும்போது கடுமையாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என பாதியிலேயே கரை திரும்பினர்.
ஏற்கனவே மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications