பாக்.- ஈரானுக்கு ரகசியமாக கன்டெய்னரில் சென்ற 62 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதமும், வறுமையும் மக்களை வாட்டி வருகிறது. இதையடுத்து அங்குள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி வெளிநாட்டு சென்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடும் சட்ட திட்டங்களை வைத்திருப்பாலும், முறையாக செல்வதற்கு தங்களிடம் போதிய பணம் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள இளைஞர்கள் சட்டத்துக்கு புறம்பாக வெளிநாட்டில் குடியேற முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு தென் மேற்கு பாகிஸ்தான் பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் குவட்டா நகரின் எல்லை பகுதியில் ஒரு கன்டெய்னர் லாரி தனியாக நின்று கொண்டிருந்தது.
அதில் இருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என அபய குரல் கேட்டது. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை உடைத்தனர். அப்போது 100க்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 62 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் ஈரானுக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே குவட்டா நகரில் இது போல் நடத்த மற்றொரு சம்பவத்தில் 35 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications