அஸ்ஸாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாமில் தலைநகர் குவஹாத்தி மற்றும் தேஜ்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 6 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.
குவஹாத்தியில் உள்ள மாலிகோவன் என்ற இடத்தில் இன்று காலை முதல் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 32 பேர் படுகாயமைடந்தனர். ஏராளமான வாகனங்கள் தீயில் கருகின.
மாலிகோவன் பகுதியில் உள்ள மா சந்தோஷி கேபின் என்ற ஹோட்டலுக்கு அருகே வெடிகுண்டு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகில்தான் மக்கள் அதிக அளவில் வந்து போகும் சிவன் கோவில் உள்ளது. எப்போதும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதைக் குறி வைத்துத்தான் இங்கு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து வருவதால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸாரையும், அவர்களது வாகனங்களையும் தாக்கினர்.
அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
தேஜ்பூரில் ...
அதேபோல, தேஜ்பூரில் உள்ள தேகாய்ஜுலி என்ற இடத்தில் குண்டுவெடித்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில்தான் ராணுவத்தின் முக்கிய தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேஜ்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவஹாத்தி வருகிறார். இந்த நிலையில் இரு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications