பாஜக போட்டியிடும் தொகுதிகளின் முதல் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 11 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பாஜகவை யாரும் கூட்டணி சேர்க்கவில்லை. இதையடுத்து சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் சரத்குமாருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் 11 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக மாநிலக் குழு முடிவு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் பாஜக போட்டியிடும் 11 தொகுதிகளை அக்கட்சித் தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார். இது முதல் பட்டியல் என்று பாஜக தெரிவித்துள்ளது.
அதன்படி பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம் ...
தென் சென்னை, வட சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி.
கலக்கும் கூட்டணி கார்ட்டூன்..
இதற்கிடையே பாஜக-சரத் கூட்டணி குறித்து வெளியான ஒரு கார்ட்டூன் மிகப் பிரபலமாகிவிட்டது. அதில்,
இல.கணேசனை சந்தித்துவிட்டு சரத்குமார் வெளியே வருகிறார். அப்போது சரத்திடம் நிருபர்கள் ''தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா?'' என்று கேட்கிறார்கள். இதற்கு ''இல்லை'' என்று பதிலளிக்கிறார் சரத்.
நிருபர்கள் ஏன் என்று கேட்க, ''நாங்கள் 15 தொகுதிகளில் போட்டியிட விரும்பினோம். ஆனால், பாஜக எங்களையே 40 இடங்களிலும் போட்டியிடச் சொல்கிறது. இதனால் தொகுதிப் பங்கீடு ஏற்படவில்லை'' என்கிறார் சரத்.
இது எப்டி இருக்கு?
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications