வருணை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன்-லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு
பாட்னா: நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் தனது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.
பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன்.
2004 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் பதவிக்கு வராமல் தடுத்தது நாங்கள்தான்.
ஆனால், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பாபர் மசூதியை இடித்த அத்வானியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, நான் மதசார்பற்றவன் என்கிறார்.
பிரதமராகிவிட வேண்டும் என்று அத்வானி கனவு காண்கிறார், அது ஒரு நாளும் நடக்காது என்றார் லாலு.
லாலு-ராப்ரி மீது எப்ஐஆர்...
லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.
இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.
இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
சமீபத்தில்தான் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை தரக்குறைவாக பேசியதாக லாலுவின் மனைவி ராப்ரி தேவி சிக்கலில் மாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
கைது செய்ய உத்தரவு:
இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை வருகிறார் லாலு..
இந் நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் மே 5ம் தேதி நெல்லையில் லாலு பிரச்சாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தனித்துப் போட்டியிடுகிறது.
இந் நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கேசவன்,
தமிழகத்தில் எங்கள் கட்சி, சமாஜ்வாடி மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நெல்லை தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளராக கீழப்பாவூரை சேர்ந்த தொழில் அதிபர் திருவேங்கடம் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய மே 5 தேதி கட்சி தலைவர் லல்லு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் நெல்லை வருகின்றனர்.
லாலுவுடன், ராப்ரிதேவியையும் அழைத்து வர முயற்சி செய்து வருகிறோம். எங்கள் வேட்பாளருக்கு யாதவ சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன என்றார்.
நெல்லை தவிர மதுரை, சிவகங்கை, தென்காசி, திருச்சி, சிதம்பரம், வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது லாலு கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications