மதுரையில் வாக்காளர்களுக்கு திமுக பணம்-போராட்டம்
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன் ஆகியோரிடம் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் சமீபத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மேலும், திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுகவினர் கூறுகிறார்கள்.
இதையடுத்து மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மேலமாசி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், அதிமுக நகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு, சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், பார்வர்டு பிளாக் செயலாளர் பசும்பொன், பாமக நகர் மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநகர் மாவட்டச் செயலாளர் பகவதி, மூவேந்தர் முன்னேற்றக் கழக செயலாளர் மணிகண்டன், தேசிய லீக் மாநிலச் செயலாளர் அபுதாஹீர், மதச்சார்பற்ற ஜனதாதள நிர்வாகி ராதாகிருஷ்ணன் உளப்ட பலர் கலந்து கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications