சென்னை-திருச்சி-அபுதாபி ஏர் இந்தியா விமான சேவை
திருச்சி: சென்னையிலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு இரண்டு முறை அபுதாபி செல்லும் ஏர் இந்தியாவின் விமான சேவை வரும் ஏப்ரல் 30 முதல் துவங்கவிருக்கிறது.
அபுதாபி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சென்னையில் இருந்து திருச்சி வழியாக அபுதாபி செல்லும் புதிய விமான சேவையை துவக்கவிருக்கிறது.
முதல் விமானம் சென்னையில் இருந்து வரும் 30ம் தேதி அபுதாபி கிளம்ப இருக்கிறது. வாரத்துக்கு இரு முறை இயக்கப்படும் இந்த விமானம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படுகிறது.
இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 12.50 மணிக்கு கிளம்பி திருச்சிக்கு மதியம் 1.40க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 2.30 மணிக்கு அபுதாபிக்கு பறக்கிறது.
திரும்பும் வழியில் அபுதாபியில் இருந்து திருச்சிக்கு காலை 11.55 மணிக்கு வருகிறது. பின்னர் மதியம் 12.50 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி 1.40க்கு சென்னை வருகிறது.
இதையடுத்து திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையும் வாரத்துக்கு 16 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக திருச்சியில் இருந்து தினமும் துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு விமானங்கள் சென்று வருகின்றன.
திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் விமான கட்டணத்தில் இந்த நிறுவனம் அதிரடி விலைகுறைப்பு செய்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி வர இதுவரை ரூ. 2,330 வசூல் செய்த இந்த நிறுவனம் தற்போது அதை ரூ. 999 ஆக குறைத்துள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications