பொள்ளாச்சி to நீலகிரி..இடம் பெயர்ந்த கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

Krishnan
நீலகிரி: பொள்ளாச்சி தொகுதியில் 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.கிருஷ்ணன் தற்போது நீலகிரி தொகுதிக்கு மாறியுள்ளார்.

இதுவரை தனித் தொகுதியாக இருந்து வந்த பொள்ளாச்சி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து நீலகிரி தனித் தொகுதிக்கு மாறியுள்ளார் கிருஷ்ணன்.

1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் மதிமுக சார்பில் எம்.பி. ஆனவர் கிருஷ்ணன். லோக்சபாவில் எந்தக் கேள்வியும் கேட்காத எம்.பிக்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றவர் கிருஷ்ணன்.

தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார். நீலகிரியில் இவருக்கு எதிர் முனையில் நிற்பவர் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா.

போட்டி கடுமையாகவே இருக்கிறது. இருப்பினும் அதிமுக ஆதரவுடன் களத்தில் நிற்பதால் கிருஷ்ணனுக்கு நம்பிக்கை உள்ளது.

ஆனால் 3வதுமுறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இம்முறையாவது அவர் லோக்சபாவில் பேசுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

72 வயதாகும் கிருஷ்ணனுக்கு தேன்மொழி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கோவையில் வசித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+