ஐபிஎல்: லலித் மோடி மீது சிதம்பரம் பாய்ச்சல்
டெல்லி: பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டிருந்தால் ஐபிஎல் சீசன் 2 இந்தியாவிலே நடந்திருக்கும். ஆனால், லலித் மோடி மாநில முதல்வர்களுக்கு நெருக்கடி கொடுத்து தொடரை தென் ஆப்ரிக்காவுக்கு கொண்டு சென்றுவிட்டார் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையாக கடிந்துள்ளார்.
இது குறித்து தனியார் டிவிக்கு சிதம்பரம் கொடுத்த பேட்டியில்,
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தியிருக்க முடியும். அதற்கான ஆலோசனைகளை வழங்கினோம். தொடரை இரண்டாக பிரித்து இந்தியாவில் நடத்தலாம். முதலில் லீக் போட்டிகளை நடத்திவிட்டு 3 அல்லது 4 வார இடைவேளைக்கு பின் அடுத்து அரையிறுதி, இறுதி போட்டிகளை வைத்துகொள்வோம் என கூறினோம்.
ஆனால், அதை ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. ஐபிஎல் அமைப்பினர் அதிபுத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்து கொண்டு, மாநில டிஜிபிக்களுக்கும், முதல்வர்களுக்கும் நெருக்கடி கொடுத்தனர். நெருக்கடி காரணமாக மாநில டிஜிபிக்கள் பாதுகாப்பு கொடுப்பது கடினம் என கைவிரித்துவிட்டனர்.
தேர்தல் சமயத்தில் இந்தியாவில் அதிக பாதுகாப்பு தேவைப்படும் ஒரே சமயத்தில் அரசியல், கிரிக்கெட் இரண்டு கூட்டத்துக்கும் முழு பாதுகாப்பு கொடுப்பது என்பது கடினமான ஒன்று தான். இதில் ரகசியம் காப்பதற்கு எதுவுமில்லை.
மோடி அளவுக்கு பெரிய ஆள் இல்லை...
எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. நான் லலித் மோடி அளவுக்கு பெரிய ஆள் கிடையாது. இந்த விஷயத்தில் பிரச்சினை என்னவென்றால், ஐபிஎல் அமைப்பினர் போலீசாரின் நிலைமையை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.
போட்டியை நடத்த தயார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினாலும் குஜராத் டிஜிபி பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அது கடினம் என்றே கூறியுள்ளார்.
ஐபிஎல் அமைப்பினரின் பிடிவாதம் காரணமாக தான் போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த தொடரை 2 சதவீத இந்திய ரசிகர்கள் மட்டுமே நேரடியாக தென் ஆப்ரிக்கா சென்று பார்க்க இருக்கிறார்கள். டிவியில் பார்க்கும் 98 சதவீத ரசிகர்களில் ஒருவனாக தான் நானும் இருக்கிறேன் என்றார் சிதம்பரம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications