டெல்லி-புதிய தேர்தல் ஆணையாளராக வி.எஸ். சம்பத்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையாளராக தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட இருக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையாளர்கள் உள்ளனர். தற்போது தலைமை தேர்தல் ஆணையாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசாமியின் பதவி காலம் வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லா வரும் 21ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்க இருக்கிறார். இதையடுத்து காலியாகும் அவரது இடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட இருக்கிறார்.
ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சம்பத், தற்போது ஆந்திர மின்சாரத் துறைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். 59 வயதான சம்பத்தின் பெயரை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தான் சோனியாவிடம் பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.
தமிழரான சம்பத் 1973ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து ஆந்திராவில் பணிபுரிய துவங்கினார். சம்பத் இன்னும் 6 ஆண்டுகள் தேர்தல் ஆணைய பணிகளை கவனிக்க இருக்கிறார். நவீன் சாவ்லாவை தொடர்ந்து அடுத்ததாக தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் எஸ்ஒய் குரேஷி 2012ல் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து 2012 முதல் 2014 வரை சம்பத் தலைமை தேர்தல் ஆணையாளராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications