தட்ஸ்தமிழ் செய்தி எதிரொலி-வைகோ உடனடி நடவடிக்கை!
கரூர்: மதிமுகவில் கரூர் மாவட்ட பொறுப்புக்குழு மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புக்குழு நியமிக்ப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தட்ஸ்தமிழில், கரூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக மதிமுகவில் மாவட்டச் செயலாளரே இல்லாமல் கட்சி நடந்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியிருந்தோம்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உயிர் நீத்த கரூர் அருகே உள்ள நொச்சிப்பட்டி தண்டபாணியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது மதிமுக என்ற கட்சி உருவானது.
இதையடுத்து திமுகவில் இருந்த கரூரைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் வைகேவின் மேல் கொண்ட நேசம் காரணமாக மதிமுகவில் இணைந்தனர். இதனால் கரூர் மதிமுகவின் கோட்டையாக விளங்கியது.
வைகோவின் நெருங்கிய நண்பரான மொஞ்சனூர் இராமசாமியை மாவட்டச் செயலாளராக வைகோ நியமித்தார். அவர் பல வருடமாக கட்சி பணியாற்றினார்.
ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் அப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ 13 பேர் கொண்ட பொறுப்புக் குழு அமைத்தார்.
கட்சிக்கு மாவட்டச் செயலாளர் இல்லாததால் ஆர்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், போன்றவற்றிலும் பல முக்கிய விவகாரத்திலும் முடிவுகளை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
இதை நாங்கள் வைகோவிடமும் சொல்லியும் ஏதும் நடக்கவில்லை என பல நிர்வாகிகள் நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து நாம் செய்தி வெளியிட்டோம். இதையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக இல்லாமல் இப்போது கரூர் மாவட்டத்திற்கு புதிய பொறுப்புக் குழுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அதன் விவரம் பின் வருமாறு:
கரூர் மாவட்ட மதிமுக பொறுப்புக்குழு தலைவராக பரணி மணி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்புக் குழு உறுப்பினர்களாக கட்டையன், சீனிவாச பெருமாள், பல்லவி ராஜா, ராணி மணி சேகர், குணசேகரன், முகமது இஸ்மாயில், தங்கவேல், நெரூர் பாண்டியன், பா.கி. தங்கராசு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதால் அம் மாவட்ட மதிமுகவினர் உற்சாகமாகியுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications