மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி? அமைச்சர் விக்னேஷ் கொடுத்த அப்டேட்!
கோவை: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், வழிகாட்டுவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். மேலும், தமிழக மேலும் சில டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 43 என் கொண்ட பேருந்து பாலாறு வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரங்கேகவுண்டன் புதூர் வரை இயக்கப்படவுள்ளது.

இதேபோல், 4A என்ற எண் கொண்ட பேருந்து கிணத்துக்கடவிலிருந்து வீரப்பகவுண்டனூர் வரை இயக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கேரள எல்லை வரை இயக்கும் வகையில் புதிய வழித்தடத்தை கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் பள்ளி கல்லூரி, பேருந்து நிறுத்தம், கோவில்கள், பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 கடைகள் மூடப்பட்டிருந்தாலும், இன்னும் இது போன்ற இடங்களில் கடைகள் செயல்படுவதாக சில புகார்கள் வந்துள்ளது.
தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி, கோவில்கள் உள்ளிட்டவற்றின் அருகில், உள்ள 717 கடைகளை அரசு மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதும் இது போன்ற இடங்களில் சில கடைகள் உள்ளது. இதை சீரமைத்த பிறகு மீண்டும் நடவடிக்கை தொடரும்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சரின் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதலுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.


Click it and Unblock the Notifications
