லண்டனில் தொடரும் தமிழர் போராட்டம்
லண்டன்: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி லண்டனில் கடந்த 10 நாட்களாக தமிழ் இளைஞர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை விவகாரத்தில் இங்கிலாந்து அரசு தலையிடக் கோரி லண்டனில் தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4 நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் சிவதரசன் சிவகுமாரவேல் (21), பரமேஸ்வரன் சுப்பிரமணியன் (28) ஆகியோர் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் தெற்கு லண்டனில் உள்ள மிட்சாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
இதையடுத்து லிபரல் டெமாக்ரட் கட்சியைச் சேர்ந்த எம்பியான சிமோன் ஹூக்ஸ் இந்த மாணவர்களை சந்தித்து உண்ணாவிரத்ததை கைவிடுமாறும், இலங்கைக்கு இங்கிலாந்து குழுவை அனுப்பி போரை நிறுத்த முயல்வதாகவும், மேலும் போராட்டக் குழுவினரை ஐ.நா, அமெரிக்கா, பிரசஸல்ஸ் ஆகிய இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
இதையடுத்து சிவகுமாரவேல் மட்டும் தனது உணணாவிரதத்தை கைவிட்டார். ஆனாலும் நீரை மட்டுமே அருந்தினார்.
இன்று லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள கிரீன் பார்க்கில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணியும் மேற்கொள்ள உள்ளனர். இதில் சிவகுமாரவேல் பேசவுள்ளார்.
தமிழர்கள் மேலும் ஒரு வாரம் நாடாளுமன்றப் பகுதியில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு லண்டன் போலிசாரிடமும் சிமோன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல கட்சிகளின் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications