விடுமுறை எடுக்காதீர்கள்-நீதிபதிகளுக்கு கோகலே அறிவுரை
நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்எல் கோகலே இன்று காலை நெல்லை வந்தார். மாவட்டசெசன்சு கோர்ட்டுக்கு வந்த அவரை முதன்மை செசன்சு நீதிபதி விஜயராகவன், வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் பீர் முகைதீன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 16ம் தேதிதான் நீதிமன்ற பணிகள் தொடங்கின. அந்த இரண்டு மாதத்தில் நடந்த கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும். புதிய நீதிபதிகள் சீனியர் நீதிபதிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.முக்கிய தீர்ப்புகளை குறிப்பு எடுத்துக் கொண்டு நல்ல அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சீனியர் ஆகிவிட்டால் நிர்வாக ரீதியாக பல்வேறு வேலைகள் வந்துவிடும். உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். வழக்குகளை நிலுவையில் இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். அதிகமாக விடுமுறைகள் எடுக்க கூடாது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வந்து கடமை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிபதிகளுக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் கோகலே.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications