கரூர் அதிமுகவினர் 700 பேர் திமுகவில் இணைந்தனர்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் பகுதி அதிமுகவை சேர்ந்த சுமார் 700 பேர் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைபவர்களை தங்களது கட்சியில் சேர்த்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தாந்தோனி பகுதி ஒன்றிய இணைச் செயலாளர் சாந்தி சந்திரசேகர் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகிசேன் முன்னிலையில் இணைந்தனர்.
அதே போன்று க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அஞ்சூர் பஞ்சாயத்துத் தலைவர் கோபால் தலைமையில் 100க்கும் அதிகமானவர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் திமுக எம்.பி. கே.சி பழனிசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரமத்தி சண்முகம், இளைஞரணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications