தேர்தலுக்குப் பின் பாஜக அணிக்கு ஜெ. தாவுவார்-காங்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறுகையில்,
தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ளும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சிறுபான்மையினர் ஓட்டுகளை குறி வைத்து தான் தற்போது ஜெயலலிதா, பாஜகவை விட்டு விலகி நிற்கிறார். தேர்தலுக்கு பின் மக்களை ஏமாற்றிவிட்டு பாஜகவுடன் கைகோர்த்து விடுவார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகும் (இதையே எத்தனை நாட்களுக்குத் தான் சொல்வார்களோ?). தற்போது எம்பியாக இருப்பவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது (இவருக்குத் தெரிந்தால் தானே சொல்வார்).
வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரசார் சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்துவது தமிழ்நாடு காங்கிரஸ் கவனத்துக்கு வந்துள்ளது. தங்கபாலு சென்னை திரும்பியதும் ஆலோசித்து, போராட்டம் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சிடிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரசுக்கு எதிராக நரேஷ் குப்தா செயல்படுகிறார் என்று தொண்டர்கள் தொடர்ந்து முறையிடுகிறார்கள்.
இது போன்ற சி.டி.க்களை வெளியிடுவோர் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவோர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் சிறப்பாக செயல்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுவதை ஏற்க முடியாது.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பாமக இருந்துள்ளது. அப்போதெல்லாம் இதுபற்றி பேசாமல் இப்போது அணி மாறிய பிறகு குறை கூறுவது கண்டனத்துக்குரியது என்றார் சுதர்சனம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications