கூலிப்படை வைத்து கணவனை கொன்ற மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சொத்து பிரச்சினை காரணமாக கணவரை கூலிபடை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செயதனர்.

சென்னை கொளத்தூர் ஜெயராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (57), பாங்க் ஆப் பரோடாவில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். தொடர்ந்து வீட்டிலே இருப்பது போராடித்து விட தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். மகள்கள் இருவரும் திருச்சியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கடந்த மார்ச் 29ம் தேதி திருச்சியில் படிக்கும் தனது மகள்களை பார்க்க வநத் சீனிவாசன் லாட்ஜ் ஒன்றில் மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனையில் அவரது மார்பு எழும்பு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை யாரோ மூச்சு திணறச் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாட்ஜ் ஊழியர்களை விசாரித்தனர். பின்னர் சென்னையில் உள்ள சீனவாசனின் மனைவி விஜயலட்சுமிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால், போலீசார் அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்தனர்.

அப்போது விஜயலட்சுமி சிலரை ரகசியமாக சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் மீண்டும் விசாரித்தனர். அப்போது தனது கணவர் விருப்ப ஓய்வில் கிடைத்த அனைத்து பணத்துக்கும் அவரது தாயாரை வாரிசாக்கிவிட்டதாகவும், தனக்கு பணம் தரவில்லை என்றும், அதனால் கூலிப்படை வைத்து கொன்றதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் விஜயலட்சுமிக்கு கூலி படையாக செயல்பட்ட அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சத்யா நாராயணன் (32), மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் (24), புதுச்சேரி நரசிம்மன் (20) ஆகிய மூன்று பேரையும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான சத்ய நாராமணன் புரட்சி பாரதம் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் போலீசிடம் கொடுத்த வாக்குமூலம்:

சீனிவாசன் விருப்ப ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம் உள்ளிட்ட சொத்துக்களை தனது அம்மாவிடம் கொடுத்து விட்டார். இதனால் விஜயலட்சுமி கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். ஆனால் சொத்துக்களை மனைவி பெயருக்கு மாற்ற அவர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமி தன் கணவரை கொலை செய்ய எங்களின் உதவியை நாடினார். கணவரை கொல்ல ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். முன்பணமாக ரூ. 50,000 கொடுத்தார். அவர் திருச்சிக்கு மலைகோட்டை ரயிலில் செல்கிறார். அப்போது அவரை ரயிலில் கீழே தள்ளி கொன்றுவிடுங்கள் என்றார்.

ஆனால், ரயிலில் இருந்து அவரை கீழே தள்ள எங்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தங்கியிருக்கும் லாட்ஜ்க்கு சென்று அவரை தீர்த்து கட்டினோம். அவரது நெஞ்சின் மேல் ஏறி உட்கார்ந்து அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றோம் என்றனர்.

மேலும், இவர்களுக்கு உதவிய சிவகுமார், பாண்டியன், சந்துரு ஆகிய 3 பேரையும் கைது செய்ய திருச்சி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+