கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் ரகளை
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட டெல்லி கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள ஐஐசி கட்டடத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தானின் தி நியூஸ் செய்தியாளர் கான் யூசுபாய் என்பவர், மீடியா செய்திகளால் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவு கெடுகிறதா என்ற தலைப்பில் பேசினார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்ட விதத்தை அவர் குறை கூறிப் பேசினார்.
இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேர் (ஸ்ரீராம் சேனா அமைப்பினர் என பின்னர் தெரிய வந்தது) எழுந்து பாகிஸ்தான் ஒழிக என கோஷமிட்டனர். மேலும், உடனடியாக இந்த கருத்தரங்கை நிறுத்த வேண்டும் எனவும் கோரினர்.
இதையடுத்து அங்கு போலீஸார் உள்ளே புகுந்தனர். போராட்டத்தில் குதித்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போகாமல் பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மீடியாக்களையும் எதிர்த்து கோஷமிட்டு ரகளை செய்தனர்.
பின்னர் போலீஸார் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பின்னர் கருத்தரங்கம் தொடர்ந்து நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications