தமிழக காங். வேட்பாளர் பட்டியல் இன்று ரிலீஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் உள்பட தற்போதைய எம்.பிக்கள் 7 பேருக்கு மீண்டும் சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. 3 பேருக்கு மட்டும் சீட் மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திலும், புதுவையிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட ஐவர் குழு, சமீபத்தில், டெல்லி சென்று குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கோஷ்டியினரும் தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்வேந்தன் ஆகியோருக்கான சீட்களை ஒதுக்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்தப் பட்டியல் சோனியா காந்தி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை சோனியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இன்றைக்குள் வேட்பாளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி யார் யாருக்கு எந்த சீட் என்பது குறித்து கூறப்படுவதாவது...
சேலம் - தங்கபாலு, சிவகங்கை - ப.சிதம்பரம், ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோவை - ஆர்.பிரபு, ஆரணி - முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர், தேனி - ஜே.எம்.ஆருண், திண்டுக்கல் - எம்.என்.கந்தசாமி, திருப்பூர் - கார்வேந்தன், தென்காசி - மாதவராவ், காஞ்சீபுரம் - ஏ.கே.விசுவநாதன், கடலூர் - பி.ஆர்.எஸ். வெங்கடேசன், திருச்சி - ராஜேசுவரி முருகையா, விருதுநகர் - கணேசன், நெல்லை - எஸ்.கே.டி. காமராஜ்.
புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவார் எனக் கூற்பபடுகிறது.
இதில், திருப்பூர் தொகுதியை முதலில் இளங்கோவன் கேட்டார். ஆனால் கார்வேந்தன் நான் அங்குதான் போட்டியிடுவேன் எனக் கூறி விட்டார்.
அதேபோல தங்கபாலு முதலில் தென் சென்னையில் போட்டியிட விரும்பினார். இதனால் திமுக தரப்பிடம் தொகுதியை மாற்றிக் கொள்வது குறித்தும் பேசப்பட்டதாம். இருப்பினும் இறுதியில் சேலத்திலேயே தான் போட்டியிடுவதாக தங்கபாலு கூறி விட்டாராம்.
இன்று பிற்பகலுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகி விடும் எனத் தெரிகிறது.
தற்போது உள்ள 10 எம்.பிக்களி்ல் (அமைச்சர்கள் உள்பட) 3 பேருக்கு மட்டும் சீட் கிடைக்காது எனத் தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications