பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஜெ. ஹெலிகாப்டர் இறங்க அனு்மதி
நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறக்க காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது.
நெல்லை, குமரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதா 18, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் முலம் மதுரைக்கு வந்து பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு ஜெயலலிதா வருகிறார்.
இதன்பிறகு தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நெல்லை அதிமுகவினர் ஹெலிகாப்டரை இறக்க பாளை ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட சில இடங்களை தேர்வு செய்தனர். அதற்கான அனுமதியையும் போலீசிடம் கேட்டு இருந்தனர்.
இந்நிலையில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஜெயலலிதா ஹெலிகாப்டர் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் திட்டமிட்டபடி தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் முலம் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு ஏப் 18ம் தேதி மதியம் 1.30மணியளவில் ஜெயலலிதா வந்து இறங்குகிறார்.
பின்னர் கார் மூலம் சென்று டவுன் வாகையடி முக்கில் நெல்லை அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தொடர்நது குமரிக்கு செல்லும் ஜெயலலிதா அங்கு கூட்டணி கட்சி வேட்பாளர் பெல்லர்மினை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இதையடுத்து குமரியிலிருந்து மதுரைக்கு சென்று அன்று இரவு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து ஏப் 19ம் தேதி மதுரையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வரும் ஜெயலலிதா கூட்டணி கட்சி வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications