சென்னை-தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 பேர் பலி
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததில் ஐந்து தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் துல்சியான் என்ற இரும்புக் கம்பி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.
அங்கு பீகார், உ.பியைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரும்புக் கழிவுகள், துகள்கள் ஆகியவற்றை பிரமாண்ட பாய்லரில் கொட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாய்லர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. அதில், இருந்த இரும்புக் குழம்பு அப்படியே வெளியே சிதறியது. இதில், சங்கர் (45), திரிபாதி (35), கரீபன் (40), வீரேந்தர் ராஜ் (35), உமேஷ் (30, மிதுன் (21), கிருஷ்ணன் (25) ஆகிய 7 பேரும் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர், திரிபாதியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, வீரேந்தர்ராஜ், மிதுன், கரீபன் ஆகிய 3 பேரும் இறந்தனர்.
மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாய்லரில் கொட்டப்பட்ட இரும்புத் துகள்களில்,
வெடிக்காத ராக்கெட் குண்டுகள் இருந்ததாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது வெடித்ததால்தான் பாய்லர் வெடித்து இரும்புக் குழம்பு கொட்டியுள்ளது.
இந்த விபத்தால் தொழிற்சாலையிலும் தீ பரவியது. இருப்பினும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications