'டபுள்' வாக்காளர்கள்..3 கலெக்டர்கள் ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: மக்களவை தேர்தல் ஏற்பாடு குறித்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆலோனை நடத்தினர்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஜி.ராகேஷ் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், எல்லைகளில் உள்ளவர்கள் இரண்டு இடங்களில் வாக்களிப்பதை தடுப்பது எப்படி என்றும், கள்ளச் சாராயம் கொண்டு வரப்படும் வாகனங்களை கண்டறிந்து எவ்வாறு தடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லைப் பகுதியில் வசிப்பவர்கள் இரண்டு இடங்களில் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications