For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாத சம்பளம் வாங்குவோருக்கு முழு வரி விலக்கு-அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும், மற்ற பிரிவினருக்கு வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் பொருளாதாரம் தொடர்பாக கூறப்பட்டுள்ள பிற உறுதிமொழிகள்:

- சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் கொடுப்பவர்களுக்கு சந்தை விலையில் இழப்பீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

- அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளில் இருந்தும் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

- மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு முறையை அதிமுக திரும்ப உருவாக்கும்.

கிரெடிட் கார்டு...

- கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரிடம் அநியாய வட்டி வசூலிக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- ஓய்வூதிய நிதி நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படமாட்டாது. மேலும், ஓய்வூதிய நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

- எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை (7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- வரி ஏய்ப்பு செய்வோர், கள்ளச் சந்தைப் பேர்வழிகள், பதுக்கல்காரர்கள் மற்றும் யூக பேரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- மத்திய அரசுப் பணிகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்போது காலியாக உள்ள 6 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

- மத்திய அரசுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

- தபால் துறையில் பணிபுரியும் 3 லட்சம் மிகைத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

- அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X