பெரியகுளத்திலிருந்து தேனிக்கு மாறிய ஆரூண்

தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை.
ஹஸரன் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.
1996 முதல் 2001 வரை தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. ஆனார்.
கட்சியில் பெரிய அளவில் எந்தப் பதவியிலும் ஆரூண் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியகுளம் தொகுதியில் கடந்த தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்துப் போட்டியிட்டார் ஆரூண். தோல்வி அடைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தினகரின் பணபலம் மற்றும் ஆள் பலத்தைத் தாண்டி ஜெயித்து அதிசயிக்க வைத்தவர்.
இந்த முறையும் ஆரூணுக்கு சீட் கிடைத்துள்ளது. தேனியில் அவருக்கு ஜெயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications