தென்காசியில் கிருஷ்ணசாமி-புதிய தமிழகம் 6 தொகுதிகளில் போட்டி

நெல்லையில் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, தேசிய லீக் ஆகியவை சார்பில் சமூக ஜனநாயக கூட்டணி ஏற்பட்டுள்ளது.
இதில் புதிய தமிழகம் கட்சி நெல்லை, தென்காசி (தனி), தூத்துக்குடி விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும், தேசிய லீக் கட்சி திருச்சியிலும் போட்டியிடுகின்றன.
மற்ற தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணியில் சேருவது தொடர்பாகவும் சில அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும். புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகளில் தென்காசி நான் போட்டியிடுகிறேன்.
மற்ற 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. 20ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுக்களை நாங்கள் 24ம் தேதி தாக்கல் செய்கின்றோம். இதுவரை நடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் என யாரும் எந்த திட்டதையும் மக்களுக்கு போராடி பெற்று தரவில்லை.
புதிய தமிழகம் தென்காசியில் வெற்றி பெற்றால் மக்கள் வளர்ச்சிக்காக பாடுபடும். எங்கள் பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இருக்கும்.
இலங்கை தமிழருக்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. தேர்தல் பணி, மனு தாக்கல் காரணமாக நெல்லை உள்ளிட்ட 100 ரயில்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொகுதி சீரமைப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதி தென்காசிக்கு மாற்றப்பட்டதால் கூடுதல் பலம். இதனால் தென்காசி தொகுதியில் எனது வெற்றி உறுதியாகிவிட்டது என்றார் கிருஷ்ணசாமி.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications