For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாராயணமூர்த்தியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 4000 கோடி

By Staff
Google Oneindia Tamil News

Narayanamurthy
பெங்களூர்: இன்போஸிஸ் நிறுவனப் பங்குகளின் இன்றைய மதிப்புப் படி, அதன் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.4000 கோடி என்பது தெரியவந்துள்ளது.

நாராயண மூர்த்திக்கும், மனைவி சுதா மூர்த்திக்கும் உள்ள சொத்து மதிப்பு மட்டுமே ரூ.1750 கோடிகள். இதிலும் மூன்றில் இரு பங்கு சுதா மூர்த்திக்கு சொந்தம். இவர்களது வாரிசுகள் அக்ஷதா மற்றம் ரோஹனுக்கு ரூ.2250 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ரோஹன். அக்ஷதா அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார்.

நாராயண மூர்த்திக்கு இன்போஸிஸில் இப்போது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன.

சுதா மூர்த்திக்கு 1.63 சதவிகித பங்குகள் உள்ளன. 2 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகள் வாரிசுகள் பெயர்களில் உள்ளன. இன்றைக்கு நாராயணமூர்த்தி குடும்பத்தின் முக்கிய வருமானமே, இன்போஸிஸ் டிவிடெண்டுகள் மட்டும்தான் என்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள அவர்களது சொத்துக்கள் குறித்த அறிக்கை.

இந்திய ஐடி நிறுவனங்களில் அதிகபட்ச டிவிடெண்ட் தருவது இன்போஸிஸ் மட்டுமே!

விரைவிலேயே, அக்ஷதாவும் ரோஹனும் இன்போஸிஸ் நிர்வாகத்தில் காலடி வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் இன்போஸிஸ் பங்குகளின் இன்றைய மதிப்பு ரூ.1367.30.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X