தங்கம் விலை இன்னும் உயரும்! - கோல்டு கவுன்சில்

Subscribe to Oneindia Tamil

Gold
மும்பை: தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான தேவை மட்டும் இந்தியப் பெண்கள் மத்தியில் கொஞ்சமும் குறைந்தபாடில்லை என்பதே உண்மை.

எப்படிப் பார்த்தாலும் தங்கத்திலிருந்து கிடைக்கும் லாபம் சராசரியாக ஆண்டுக்கு 26 சதவிகிதமாக உள்ளது.

இதனால் குடும்பப் பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.

சர்வதேச தங்க கவுன்சில் அறிக்கைப்படி, கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு எப்படி இருந்தாலும், அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் சராசரி லாபம் ஆண்டுக்கு 26 சதவிகிதமாக உள்ளது.

எனவேதான் தங்கத்தின் ஏற்ற இறக்கங்களை யாரும் நிலையானதாகக் கருதுவதில்லை.

1999-ல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.3550 மட்டுமே. சரியாகப் 10 ஆண்டுகளில் இந்த விலை 216 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது தங்க கவுன்சில்.

'தங்கத்தின் விலையில் இப்போதுள்ள ஏற்ற இறக்கங்கள் தற்காலிகமானவைதான். இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை மேலும் 24 சதவிகிதம் உயர வாய்ப்புகள் உள்ளன. உலகில் மற்ற எல்லா சொத்துக்களையும் விட பாதுகாப்பான, எளிய முதலீடு தங்கம் மட்டுமே என்ற எண்ணம் இந்தியப் பெண்களுக்கு இருப்பதால், தங்கத்தின் விலை நிச்சயம் உயரும்', என்கிறார் சர்வதேச தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+