உளவு செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியது பி.எஸ்.எல்.வி.

Subscribe to Oneindia Tamil

PSLV RISAT -2
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. - சி12 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

300 கிலோ எடை கொண்ட ரிசாட்-2 செயற்கைக் கோளுடன், 40 கிலோ எடை கொண்ட அனுசாட் என்ற கல்வி செயற்கைக் கோளும் உடன் செலுத்தப்பட்டது.

இன்று காலை 6.45 மணிக்கு இந்த ஏவல் வெற்றிகரமாக நடந்தது.

ரிசாட் செயற்கைக் கோள் அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாக்குப் பிடித்து பூமி குறித்த படங்களை எடுத்து அனுப்பும். மேலும், இயற்கை சீற்றங்கள் குறித்த புகைப்படங்களையும் எடுத்து அனுப்பும். இதுதவிர பாதுகாப்பு தொடர்பான உளவு புகைப்படங்களையும் அது எடுத்து அனுப்பும்.

சென்னை பல்கலையின் அனுசாட் ..

அனுசாட் செயற்கைக் கோள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்த செயற்கைக் கோள். இந்திய பல்கலைக்கழகம் ஒன்று வடிவமைத்துள்ள முதல் செயற்கைக் கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆறு ஆண்டு காலமாக இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கும் பணி நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+