தா.பாண்டியன் சொத்து விவரம் - ரூ. 40 லட்சம் வீடு, ரூ. 21 லட்சம் கடன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னை தொகுதி சிபிஐ வேட்பாளரான தா.பாண்டியன், தனக்கு சென்னையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான வீடு உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாகவும் ரூ. 21 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தா.பாண்டியன், அதனுடன் இணைத்துள்ள சொத்துக்கள் குறித்த விவரத் தகவல் ..
சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வீடு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரூ.2 லட்சம் மதிப்பில் 5 ஏக்கர் நிலம், மனைவியிடம் 15 பவுன் நகை உள்ளது.
வங்கி கணக்கில் தன் பெயரில் ரூ.1,100-ம் மனைவி பெயரில் ரூ.15 ஆயிரமும் உள்ளது.
இது தவிர வங்கி கடன் ரூ.21 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications