இலங்கைப் பிரச்சினையில் ஜெ.வை முந்தும் முயற்சியே கருணாநிதியின் பேச்சு: சோ, சாமி
சென்னை: இலங்கைப் பிரச்சினையில் எங்கே ஜெயலலிதா பெயரைத் தட்டிச் சென்று விடப் போகிறாரோ என்ற பயத்தில்தான் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார் கருணாநிதி என்று பத்திரிக்கையாளர் சோ மற்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளனர்.
என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி குறித்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவை விட நல்ல பெயர் வாங்க வேண்டும் என துடிக்கிறார் கருணாநிதி.
இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். அதை விட பெரிதாக பேசினால்தான் ஜெயலலிதாவை விட நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் கருணாநிதி.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனை பகத் சிங், நேதாஜி என்று புகழ்ந்தார் கருணாநிதி. இப்போது அந்த பழைய காலத்திற்கே அவர் திரும்பியுள்ளார் என்றார்.
சுப்ரமணியம்சாமி கூறுகையில், தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவை விட நல்ல பெயர் வாங்கும் முயற்சியே கருணாநிதியின் இந்த திடீர் பேச்சு.
கருணாநிதி சொல்வது போல பிரபாகரனுக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்பு இல்லை. ஆனால் தமிழர்களின் உணர்வுகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாகவே இவ்வாறு பேசியுள்ளார் என்றார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications