கம்யூனி்ஸ்ட் பிரதமர்-சிபிஎம் தயார், இந்தியா ரெடியா?
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் பிரதமர் ஆவது குறித்து பரிசீலிப்போம் என அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தது. அப்போது பிரதமர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பெயர் அடிபட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் அதை நிராகரித்து விட்டது. இதையடுத்து வாய்ப்பு தேவே கெளடாவுக்கு கிடைத்தது.
ஜோதிபாசுவுக்கு கிடைத்த வாய்ப்பு தடுக்கப்பட்டது சரித்திர தவறு என்பதை சில ஆண்டுகள் கழித்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உணர்ந்தது.
இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு அரிதி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக மூன்றாவது அணி தலைவர்கள் கருதி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில்,
யார் ஆட்சி அமைப்பது, யார் பிரதமர் ஆவது? என்பதெல்லாம் மக்கள் தீர்ப்பை பொறுத்தது. பிரதமர் யார் என்று தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வதுதான் சரியான முறை.
கடந்த 1996ல் பிரதமர் பதவியை நிராகரித்த பிறகு, அதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், எதிர்காலத்தில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால், கட்சியின் மத்திய குழுவை கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
எனவே, வரும் தேர்தலுக்கு பிறகு, மூன்றாவது அணி ஆட்சியை பிடித்தால், அந்த ஆட்சியில் பங்கேற்பது, பிரதமர் பதவியை ஏற்பது ஆகிய வழிமுறைகளை மறுப்பதற்கு இல்லை.
அதே சமயத்தில், கொள்கை முடிவு எடுப்பதில் உரிய அதிகாரம் இருந்தால் மட்டுமே, ஆட்சியில் பங்கேற்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. மூன்றாவது அணியின் கூட்டணி அரசுக்கு ஒருமித்த கருத்துடன் பொது செயல் திட்டம் உருவாக்கப்படுவதும் அவசியம் என்றார் சீத்தாராம் யெச்சூரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications