மாயாவதியின் புகார் ஆதாரமற்றது-நவீன் சாவ்லா
டெல்லி: நானும், தேர்தல் ஆணையர் குரேஷியும் காங்கிரஸுக்கு சாதகமாக செயல்படுவதாக உ.பி. முதல்வர் மாயாவதி கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.
நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்துள்ளதன் மூலம் இந்தத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அவரும், தேர்தல் ஆணையர் குரேஷியும் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் ஏஜென்ட்டாக மாறி விட்டது என்று மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.
இதை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் மறுத்தார் நவீன் சாவ்லா. செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதே மாயாவதிதான் 2007ம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து, உ.பியில் சட்டசபைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் ஆணையம் நடத்தியது என்று பாராட்டிப் பேசினார் என்றார் சாவ்லா.
பாஜக ஆட்சியைப் பிடித்தால் உங்களை மாற்ற முயற்சிப்போம் என பாஜக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த நவீன் சாவ்லா, அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. எதிர்ப்புகளிலிருந்து தேர்தல் ஆணையம் நிறைய கற்றுக் கொள்கிறது. எங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. சீரியஸாகவே பார்க்கிறோம். அதிலிருந்து பலம் பெறுகிறோம் என்றார் சாவ்லா.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications