அதிமுகவுக்கு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆதரவு!
மதுரை: தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக அணிக்கு ஆதரவாக எஸ். எம்.எஸ். மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக அணி வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.எஸ். மூலமும், நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னாவை ஆதரித்து அவர்களின் எஸ்.எம்.எஸ். பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு துவக்கி வைத்தார்.
அதே போன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் அதிமுக அணிக்கு செல் போனில் எஸ்எம்எஸ் மூலம் திரட்ட உள்ளதாக அதன் தலைவர் யுவராஜ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு கேபிள் டிவியை ஒடுக்கிய திமுகவுக்கு பாடம் புகட்ட நாங்கள் பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம் என்றும் 40 தொகுதிகளிலும அதிமுக அணி வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications